அன்னவாசலில் லயன்ஸ் சங்கம் துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் லயன்ஸ் சங்கம் துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவிற்கு கீரனூர் லயன் சங்க தலைவர் கார்த்திக்கேயன் தலைமை தாங்கினார். விழாவில் புதிய சங்கத்தை மாவட்ட ஆளுநர் சவரிராஜ் துவங்கி வைத்தார். இதில் தலைவராக முகமதுசாதிக்பாட்சா, செயலாளராக மணி, பொருளாளராக ஜஸ்டின் ஆகியோர்களை மாவட்ட முதலாம் துணை ஆளுநர் மணிவண்ணன் அறிமுகப்படுத்தினார்.

பின்னர் மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் விஜயலெட்சுமி புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து பேசினார். மாவட்ட தலைவர் செல்வம் ஆளுநர் சேவை திட்டங்களை துவக்கி வைத்து பேசினார். இதில் மண்டலத் தலைவர் மருத்துவர், மிணியாஸ், வட்டாரத் தலைவர் ஜான் கென்னடி மருத்துவர் மணியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் துணை தலைவராக ஜாபர் அலி, துணை செயலாளர் ராபர்ட் பெல்லார்மென், துணை பொருளாளராக ஜாகீர்உசேன், நிர்வாக அலுவலர் மீராமொய்தீன், சங்க தலைமை பண்பு ஒருங்கிணைப்பாளராக சலீம் இஸ்மாயில், உறுப்பினர் வளர்ச்சி தலைவர் பிரகாஷ், சேவைத்திட்ட தலைவர் மருத்துவர் சையது முகமது, மக்கள் தொடர்பு அலுவலர் சாலை மதுரம், ஒருங்கிணைப்பாளர் பிரான்ஸிஸ் எடிசன், அடக்குநர் லட்சுமணன், முடுக்குநர் தாயுமானவன், இயக்குநர்கள் முகமதுரிசா, பிரபா, அப்துல்ரகுமான், புரோஸ்கான், ஆகியோரும், உறுப்பினர்களாக மங்களம்பாபு, தர்மலிங்கம், சாலைதேவ திருமணி, ராஜா, ரெங்கன், வெற்றி வேல், அப்துல்ரஜாக், பொறுப்பேற்றுக் கொண்டனர். தேர்வு செய்யப்பட்டனர் பின்னர் 50-க்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரிசி சிப்பம், தலை கவசம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முடிவில் செயளாளர் மணி நன்றி கூறினார்.