புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் இந்திய அளவில் நடைபெற்ற டிரையாத்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேக்ஷ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உத்ரகாண்ட் மாநிலம், கனிக்ஷ்பூரில் நடைபெற்ற டிரையாத்தல் (Swimming, Running & Shooting) போட்டிகளில் இந்திய அளவில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

அம்மன்பேட்டை என்ற கிராமத்தை சேர்ந்த சந்தோக்ஷிகா, நிக்ஷாந்த் கிருக்ஷ்ணன், தனுக்ஷ் கிருக்ஷ்ணன் ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தந்தையார் மு.மணி சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். தாயார் ஆ.சண்முகவள்ளி. இவர் அதிகாலையில் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்திற்கு தினசரி பயிற்சிக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த குழந்தைகள் மாவட்ட, மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். தற்போது உத்ரகாண்ட் மாநிலத்தில் Modern Pentathlon National Championship – 2024 இந்திய அளவில் நடைபெற்ற டிரையாத்தல் (Swimming, Running & Shooting) போட்டியில் புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி சந்தோக்ஷிகா 11-வயதிற்கான பெண்கள் பிரிவில் டிரையாத்தலில் மூன்றாமிடமும், டையாத்தலில் மூன்றாமிடமும், 14-வயதிற்குட்பட்ட பிரிவில் நிக்ஷாந்த் கிருக்ஷ்ணன் ஐந்தாமிடமும், 15-வயதிற்குட்பட்ட பிரிவில் தனுக்ஷ் கிருக்ஷ்ணன் ஆறாமிடமும் பெற்று எகிப்து நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்திய அளவில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, மாணவர்களுக்கு மாலை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கினர். ஆசிரியர்கள் ஆராத்தி எடுத்து மாணவர்களை வரவேற்றனர். இந்நிகழ்வில் இயக்குநர் சுதர்சன், துணை முதல்வர் குமாரவேல் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, அபிராம சுந்தரி, வரலெட்சுமி, பாலசங்கர் மற்றும் காசாவயல் கண்ணன், உதயகுமார் உள்ளிட்ட ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.