புதுக்கோட்டை லேணாவிலக்கில் உள்ள மவுண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் மாவட்ட அளவில் சிபிஎஸ்இ பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தஞ்சாவூர் பிளாசம் பள்ளி முதல்வர் சிவகாமி வள்ளியப்பன், முன்னாள் கல்வி ஒருங்கிணைப்பாளர் இராதிகா மோகன், சென்னை இராஜாஜி வித்யா ஆஸ்ரமம் பள்ளி பி.வி பவன்ஸ் ஆகிய கல்வியாளர்களை கொண்டு ஆசிரியர்களுக்கு வாழ்க்கைத் திறன் மற்றும் உளவியல் திறன் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
அன்றாட வாழ்க்கையின் தேவைகளை, சவால்களை மனிதர்கள் திறம்பட சமாளிக்க, தினசரி மனித வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்வது இதற்கு கல்வி அல்ல நேரடியான அனுபவத்தின் மூலம் பெறப்பட்ட அனுபவம் மனிதத் வாழ்க்கைக்கு எவ்வாறு உதவுகின்றன. உளவியல் திறன்கள் மற்றும் தனி மனித திறமைகள் கல்வியறிவுடன் இணைந்து செயல்படுகின்றன. கல்வி, சமூக மற்றும் உணர்வுப்பூர்வமான கற்றல் செயல்பாடுகளுக்கு இத்திறன்கள் எவ்வாறு உதவுகின்றன. மனிதன் பயம், கோபம், மன அழுத்தம் ஆகியவற்றை ஒதுக்கி ஒரு தரமான வாழ்க்கையை அடைய நல்ல சிந்தனை, நகைச்சுவை உணர்வு தேவைப்படுகிறது. வாழ்க்கை திறன்கள் பெரும்பாலும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களால் பள்ளியில் பயிலும் குழந்தைகளை கவனித்தல் மற்றும் அனுபவத்தின் மூலமாக நேரடியாக மாணவர்களின் தனிப்பட்ட திறனை கவனித்து கல்வியை கற்பிப்பதன் வாயிலாக அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை திறன் எவ்வாறு உயர்வடைகிறது என்று ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி பள்ளியின் முதல்வர் டாக்டர். சலஜாகுமாரி தலைமையில் நடைபெற்றது. நிகழ்சி சிறப்பாக நடைபெறுவதற்கு பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சரண்குமார், சண்முகநாதன் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நாட்டுப்பண்ணுடன் விழாவானது இனிதே நிறைவடைந்தது.