புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரியில் “சொகுசு கப்பல்களில் உணவக மேலாண்மைத்துறை மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள்” என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரை

oplus_2

புதுக்கோட்டை, ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), உணவக மேலாண்மையியல் துறையின் சார்பாக “சொகுசு கப்பல்களில் உணவக மேலாண்மைத்துறை மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள்” என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரை இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் உணவக மேலாண்மைத்துறையில் பயின்ற முன்னாள் மாணவரும் அமெரிக்கா புளோரிடா மாகனத்தில் இயங்கி வரும் ராயல் கரீபியன் சொகுசு கப்பலின் தலைமை சமையல் நிபுணர் சு.கண்ணன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.

அவர் தம் உரையில் போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் உணவக மேலாண்மைத்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. நாம் அவற்றை எவ்வாறு தேர்வு செய்வது என்பது பற்றியும், தங்கள் நேர்முகத் தேர்வுக்கு எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினார். மேலும் உணவகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், உணவக கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் பற்றியும் எடுத்துக்கூறினார். கப்பல்களில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த பயணிகள் பயனிக்கின்றனர். அவரவர்க்கு ஏற்றவாறு உணவுகளை எவ்வாறு தயாரிப்பது மற்றும் உணவுத்தேவைக்கேற்ப தங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது என்பது பற்றி விளக்கினார்.

முன்னதாக உணவக மேலாண்மைத்துறைத் தலைவர் முனைவர் எஸ்.கார்த்திகேயன் வரவேற்புரை வழங்க, உதவிப்பேராசிரியர் எம்.கார்த்திகேயன் நன்றி கூறினார். இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை இத்துறையின் உதவிப் பேராசிரியர்கள் எஸ்.பாரதிதாசன் மற்றும் எஸ்.ரெங்கசாமி செய்திருந்தனர்.