புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று சனிக்கிழமை விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் முதன்மை விருந்தினராக எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ் பெண் முத்தமிழ்செல்வி நாராயணன் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி விழாவினை தொடங்கி சிறப்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து மாணவர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிவாகை சூடிய மாணவர்கள் ஒருங்கிணைந்து ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். தொடர் ஓட்டம், ஓட்டப்பந்தயம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு உடனடியாக பரிசுகளை சிறப்பு விருந்தினர் வழங்கினார். அனைத்து வகுப்பு மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பலவிதமான வண்ணமயமான நடனங்கள், கராத்தே மற்றும் சிலம்ப நிகழ்ச்சிகள், பெற்றோர்களுக்கான போட்டிகள் ஆகியவன் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினார்.
இதில் பள்ளியில் தலைவர் தேனாள் சுப்பிரமணியன், பள்ளியின் நிர்வாக உறுப்பினர்கள், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் அஸ்வினி நாச்சம்மை, பள்ளியின் முதல்வர் சிராஜுதீன், துணை முதல்வர் சுப்ரமணியன் ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை கண்டு மகிழ்ந்தனர். நாட்டுப் பணிவுடன் விழா நிறைவுபெற்றது.