புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பாக இன்று “IT WIZARD –2024” என்ற கல்லூரிகளுக்கு இடையே ஆனா போட்டிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சார்ந்த 19 கல்லூரிகளிலிருந்து கணினி துறையைச் சார்ந்த 258 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் முனைவர் கவிதா சுப்பிரமணியன் தலைமை தாங்கி, விழா நிறைவில் நிறைவுரையாற்றி பரிசு வழங்கினார். கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஆறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த கல்லூரிகளுக்கு இடத்திற்கேற்ப புள்ளிகள் வழங்கப்பட்டது. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதலோடு, ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
வினாடி வினா போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு தஞ்சாவூர் குயின்ஸ் மகளிர் கல்லூரியும், மூன்றாம் பரிசு புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியும் பெற்றது. பொருள் தேடல் போட்டியில் முதல் பரிசு பள்ளத்தூர் சீத்தா லெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியும், இரண்டாம் பரிசு தஞ்சாவூர் குயின்ஸ் மகளிர் கல்லூரியும், மூன்றாம் பரிசு பேராவூரணி அரசு கலைக்கல்லூரியும் பெற்றது.
மௌன நாடகம் போட்டியில் முதல் பரிசு புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியும், இரண்டாம் பரிசு மதுரை யாதவர் கல்லூரி மற்றும் மூன்றாம் மணமேல்குடி அன்னை கதீஜா மகளிர் கல்லூரியும், புகைபடம் எடுத்தல் போட்டியில் முதல் பரிசு தஞ்சாவூர் குயின்ஸ் மகளிர் கல்லூரியும், இரண்டாம் பரிசு சுதர்சன் கலை அறிவியல் கல்லூரி, தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியும் பெற்றது.
பொருள் விளம்பரம் போட்டியில் முதல் பரிசு மதுரை யாதவர் கல்லூரியும், இரண்டாம் பரிசு தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியும், மூன்றாம் பரிசு தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியும் , தவறு திருத்தம் போட்டியில் முதல் பரிசு காரைக்குடி டாக்டர் உமையாள் இராமனாதன் மகளிர் கல்லூரியும், இரண்டாம் பரிசு பள்ளத்தூர் சீத்தா லெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியும், மூன்றாம் பரிசு புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியும் பெற்றது.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, அனைத்து போட்டிகளிலும் கூடுதல் புள்ளி பெற்று முதல் இடம் பெற்ற தஞ்சாவூர் குயின்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள் சாம்பியன் கோப்பையைத் தட்டிச் சென்றனர். முன்னதாக ஜெ.ஜெ. கல்லூரி முதல்வர் முனைவர் ஜ.பரசுராமன் வரவேற்புரை வழங்கினார். இறுதியில் தகவல் தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் முனைவர் இரா.மணிமாறன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியை, துறைத்தலைவர், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.