புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 78ஆவது சுதந்திர தினவிழா நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட இளைய மன்னர் ராஜ்குமார் விஜயகுமார் தொண்டைமான் தேசியக்கொடி ஏற்றினார். விழாவில் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்கள். தேசபக்திப் பாடல்கள் பாடினார்கள். சுதந்திர தின விழிப்புணர்வு பாடல்களுக்கான நடனம் காண்போரைக் கவர்ந்தன.
சிறப்பு விருந்தினாரகக் கலந்து கொண்ட மாநில “ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர்” சிகரம் சதீக்ஷ்குமார் பேசும் போது, நான் பல்வேறு பள்ளிகளுக்கு சென்றுள்ளேன். இந்தப் பள்ளியில்தான் சுதந்திர தினவிழாவிற்கு அதிகமான பெற்றோர்கள் வந்திருக்கின்றார்கள். இது பெற்றோர்கள் இந்தப் பள்ளி மீதும், பள்ளியின் முதல்வர் மீதும் வைத்திருக்கின்ற நம்பிக்கையை காட்டுகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நம்ப வேண்டும். மாணவர்கள் தங்களின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் உயர்ந்த லட்சியங்களை அடைய முடியும். அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டார்.
“நிகழ்ச்சியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி பிறந்த மாணவர்களுக்கு பிறந்தநாள் பரிசு வழங்கப்பட்டது. பள்ளியில் எல்.கே.ஜி. தொடங்கி, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது” பள்ளி நூலகத்தை அதிகம் பயன்படுத்தி நூல்களை வாசித்த மாணவர்களுக்கும், தமிழ்மன்றம், காமராஜர் பிறந்தநாள் ஓவியப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக பள்ளியின் இயக்குநர் சுதர்சன் வரவேற்க, நிறைவாக பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.செந்தில்குமார் பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் மகாத்மா ரவிச்சந்திரன், ரோட்டரி மாவட்டம் 3000 ஆளுநர் கருணாகரன், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, வரலெட்சுமி, பாலசங்கர், மீனாட்சி, மேலாளர் ராஜா, ஆசிரியர்கள் கமல்ராஜ், காசாவயல் கண்ணன், உதயகுமார், உடற்கல்வி ஆசிரியர்கள் அமர்நாத், முத்துமணி மற்றும் ஏராளமான பெற்றோர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை எட்டாம் வகுப்பு மாணவிகள் தாரிகா, ஹென்சிகா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.