புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சர்வதேச பள்ளியில் 78-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வர் டாக்டர் ஜலஜா குமாரி கொடியேற்றி மாணவர்களிடம் உரையாற்றும் போது மாணவர்கள் தங்களுடைய கடமையை சரிவர செய்ய வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும், மழை நீர் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும், சுற்றுச்சூழல் மாசு அடையாமல் மரங்கள் நட்டு, சுற்றுச்சூழலை சரி செய்ய வேண்டும், மின்சார சேமிப்பு மற்றும் சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சார தயாரிக்கும் திட்டங்களை மாணவர்கள் கற்று அந்த துறையில் சாதனை புரிய வேண்டும்.
பெண்கள் பாதுகாப்பில் நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்கள் அனைத்து துறையிலும் சாதனை படைக்க வேண்டும். இந்தியா அனைத்து துறையிலும் வல்லரசாக மாணவ, மாணவிகள் பாடுபடவேண்டும் என்றும், வயநாட்டு நிகழ்வில் தனது முழு ஒத்துழைப்பை வழங்கிய இராணுவத்தினருக்கு மரியாதை செலுத்துவதோடு அவர்களை போல தியாகத்தோடு நாட்டு பணிகள் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுதந்திர தினம் என்பது ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வானது அல்ல மனதளவிலும், உடல் அளவிலும் நாட்டு பற்று ஏற்படுத்தும் நிகழ்வு என்று உரையாற்றினார்கள். பள்ளியின் தலைவர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன் மற்றம் இணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன் ஆகியோர் தங்களது சுதந்திர தின வாழ்த்துகளை மாணவர்களுக்கு தெரிவித்து அனைத்து துறையிலும் சாதனை படைக்கவேண்டும் என்று தெரிவித்தனர். மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் பள்ளி கலையரங்கில் மாணவ, மாணவிகளின் நாட்டுப்பற்று கதைகள், கலைநிகழ்ச்சிகள் மற்றம் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.