புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சங்க துவக்க விழா

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ”கூடிப்பழகும் இயல்பினைத் தன்னகத்தே வளர்க்கும் பொருட்டாக” கிளப் துவக்க விழா இனிதே நடைபெற்றது. ஏறத்தாழ 27 சங்கம் 2024 – 2025ஆம் ஆண்டில் துவங்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியானது இறைவணக்கப் பாடல் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு துவங்கியது. பள்ளியின் துணைத் தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன் வரவேற்புரை அளித்தார். சிறப்பு விருந்தினரான புதுக்கோட்டை விக்டரி லயன்ஸ் கிளப் தலைவர் MJF. லயன் பி.சேகருக்கு நினைவுப்பரிசினை வழங்கி பள்ளியின் கல்வி முதல்வர் எஸ்.குமரேஷ் பொன்னாடை அணிவித்தார்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, பள்ளியின் தலைவர், பள்ளியின் முதல்வர்கள் இவர்களுடன் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும் சங்கப் பொறுப்பாளர்களுக்கு பேட்ஜ் அணிவித்தார்கள். சிறப்பு விருந்தினர் பேசுகையில் கூட்டு முயற்சியின் மதிப்பினைப் பற்றியும், பாடத்திட்டம் அல்லாத பிற செயல்பாடுகளையும், மாணவர்கள் இவ்வகையான சங்கங்களின் செயல்பாடுகள் வழியாக கற்றுக் கொள்ள முடியும் என்றுக் கூறினார். நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளியின் கல்வி முதல்வர் எஸ்.குமரேஷ் நன்றியுரை வழங்க, பள்ளியின் நிர்வாக முதல்வர் எஸ்.கிருபா ஜெபராஜ் வாழ்த்துரை வழங்கினார்.