புதுக்கோட்டை அருள்மிகு பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோயில் ஆடி திருவிழா

புதுக்கோட்டை அருகிலுள்ள இந்து சமய அறநிலையத்துறையைச் சேர்ந்த பொற்பனைக்கோட்டை மேலவாசல் அருள்மிகு முனீஸ்வரர் திருக்கோயிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு காலையில் பொற்பனை முனீஸ்வரருக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம், தீபராதனை நடைபெற்றது.

மாலையில் பொற்பனை முனீஸ்வரர் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது. விழாக்குழுவினர், இந்து சமய அறநிலையத்துறை பொற்பனைக்கோட்டை செயல் அலுவலர் சுதா, ஆய்வாளர் புவனேஸ்வரி, பழனியப்பன் பூசாரி, அடைக்கலம் பூசாரி, ஆறுகரை வகையறார்கள், பேட்டையர்கள் குணா உள்ளிட்டவர்கள் ஏற்பாடுகளை  சிறப்புடன் கவனித்தனர். ஏராளமான பக்தர்கள்  வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் சிறப்புடன் நடைபெற்றது.