உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தாய்ப்பாலூட்டலை திறம்பட செயல்படுத்தி வரும் செவிலியர்களுக்கான சிறப்பு விருது வழங்கும் விழா

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் அரசினர் இராணியார் மகப்பேறு மருத்துவமனை (பச்சிளம் குழந்தைகள் பிரிவு) இணைந்து நடத்தும் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தாய்ப்பாலூட்டலை திறம்பட செயல்படுத்தி வரும்  செவிலியர்கள் 20 பேருக்கும், 10 மருத்துவ பணியாளர்களுக்கும் சிறப்பு விருது வழங்கும் விழா புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் வி.ஆர்.எம்.தங்கராஜ் தலைமையில் அரசு இராணியார் மகப்பேறு மருத்துவமனை  வளாகத்தில் நடைபெற்றது.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் சங்க பொருளாளர் கண.மோகன் ராஜா வரவேற்றார். நிகழ்ச்சியில் பச்சிளம் குழந்தைகள் பிரிவு பொறுப்பு மருத்துவர் ஆர்.பீட்டர், குழந்தைகள் நலத்துறை டாக்டர் இங்கர்சால், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜி.எஸ்.எம்.சிவாஜி, துணை ஆளுநர் டி.பாபுஜான், இருக்கை மருத்துவ அலுவலர் டாக்டர் ஏ.இந்திராணி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் தையல்நாயகி, துணை முதல்வர் டாக்டர் ராமலதா ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை டாக்டர் டி.வெங்கடேசன், மேனாள் பொருளாளர் ஆர்.சங்கர் செய்திருந்தனர். உடனடி முன்னாள் தலைவர் அசோகன் சேட் என்ற அப்துல் ரகுமான், பாலமுருகன், யோகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். தாய்ப்பாலின் மகத்துவம் குறித்த விழிப்புணர்வு வில்லுப்பாட்டு செவிலிய மாணவர்கள் செய்திருந்தனர்.  புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் (பொ) டாக்டர் ஜி.ஏ.ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு பயன்படும் விதமாக 30 பேருக்கு (HIMALAYA KIT) வழங்கப்பட்டது. மேலும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களை சிறப்பாக கவனித்துக் கொண்ட செவிலியர்கள் 20 பேர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் 10 பேருக்கும் சிறப்பு விருதும் வழங்கி கௌரவம் செய்து சிறப்புரை வழங்கினார். நிறைவாக செயலாளர் கே.ஓம்ராஜ் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.