அன்னவாசல் வட்டார வள மையம் சார்பாக புதிய பாரத எழுத்தறிவு திட்டம்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அன்னவாசல் வட்டார வள மையம் சார்பாக புதிய பாரத எழுத்தறிவு திட்ட இரண்டு நாள் பயிற்சி வட்டார வளமைய அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

பயிற்சியினை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு செந்தில்குமார் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தார்.வட்டார கல்வி அலுவலர்கள் அலெக்சாண்டர், செலின், கலா ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி குறித்த கருத்துரை வழங்கினார்கள். புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள் 70 பேர் கலந்து கொண்டு எண்ணும் எழுத்தும் பயிற்சியினை கற்றுக் கொண்டனர். இப்ப பயிற்சியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் மாயழகு கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

அவர் பேசுகையில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோருக்கான இந்த கல்விமுறையானது தற்போதைய சூழலில் மிகவும் அவசியமானதாகும். பிறருக்கு கல்வி கற்றுக் கொடுப்பது மிகப்பெரிய சேவை ஆகும். அந்த அடிப்படையில் தன்னார்வ பணியாளராக நீங்கள் கல்வியை பிறருக்கு கற்பிக்கும் பணியை செய்ய முன்வந்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது. அர்ப்பணிப்பு உணர்வோடு கல்வியை பிறருக்கு கற்றுக் கொடுக்க அது மிகுந்த மன நிறைவை நமக்கு கொடுக்கும். முதியோர்கள் கையெழுத்து போடுவதற்கும் வங்கிகளில் சென்று பணம் எடுப்பதற்கும், சமூகத்தில் அன்றாடம் நிகழும் முக்கிய செய்திகளை வாசித்து தெரிந்து கொள்வதற்கும் கல்வி அறிவு அடிப்படையானது. அந்த வகையில் பள்ளி சாரா மற்றும் முதியோர்களுக்கு கல்வியை நீங்கள் கற்றுக் கொடுப்பது இச்சமூகத்திற்கு செய்கிற சிறந்த சேவையாகும்  என்று பேசினார். பயிற்சியில் எண்ணும் எழுத்தும் இரு கண்களாக போற்றப்பட வேண்டும். கண்ணுடையார் என்போர் கற்றோர் முகத்திரண்டு புன்னுடையார் கல்லாதவர் என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு இணங்க எண்ணையும் எழுத்தையும் கற்பதோடு பிறருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில்  ஆசிரியர் பயிற்றுநர்கள் ஜோசப் ரோசாாரியோ கில்பர்ட், உமா மகேஸ்வரி, மீனாட்சி போன்றோர் பயிற்சி அளித்தனர். தன்னார்வலர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.  பயிற்சியானது மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று தன்னார்வலர்கள் கூறிச் சென்றனர்.