புதுக்கோட்டையில் தமிழ்நாடு பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நிறுவன தலைவர் கலைமாமணி கே.ஏ.சத்தியபாலன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கெளரவத்தலைவர் கலைமாமணி கே.ஏ.சத்தியபாலன், மாநில பொதுச்செயலாளர் கலைச்சுடர்மணி சா.முனிசாமி, மாநில பொருளாளர் சித்தாந்த புலவர் வீ.ரெங்கையா, மாநில துணைத்தலைவர் கலைச்சுடர்மணி ஏ.ராஜேந்திரன், மாநில துணைச்செயலாளர் கலைநன்மணி ச.கலைச்செல்வி, மாநில சட்ட ஆலோசகர் ஆ.அரசு, மாநில சங்க ஆலோசகர் சி.ராஜேந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளர் டி.ரவிச்சந்திரன் ஆகியோர் புதிய மாநில நிர்வாகிகலாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும், இக்கூட்டத்தில் சங்க கட்டிடம் கட்டுவதற்கு மனையிடம் அரசு மூலம் இலவசமாக தரவேண்டும். நாட்டுப்புற நலவாரியம் அமைக்கவேண்டும். நலிந்த கலைஞர்களுக்கு தற்போது வழங்கும் ரூ. 3,000-தில் இருந்து ரூ. 5,000-மாக உயர்த்தி வழங்கவேண்டும். 28.07.2024-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகக்குழு வரும் ஐந்து ஆண்டுகளுக்கு 27.07.2029 வரை இருக்கும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.