முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் கே.ஹச்.சலீம் வழிகாட்டுதலின் படி டீம் மருத்துவமனை சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம், திருவேங்கைவாசல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இம்மருத்துவ முகாமில், தொற்றா நோய்களான சர்க்கரை நோய், இருதய நோய், புற்று நோய் ,ஆஸ்துமா நோய் மற்றும் பல்வேறு நோய்கள் பற்றிய விழிப்புணர்வும ,நோய் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்பட்டன. டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் அறிவரசு அனைவருக்கும் பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கினார். முகாமில் இரத்த அழுத்தம் ,உயரம்,வெப்பத்தின் அளவு, இரத்த சர்க்கரை அளவு போன்ற பரிசோதனை செய்யப்பட்டது. இம்முகாமிற்க்கு திருவேங்கைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சண்முகம் முன்னிலை வகித்தார் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துமனையின் பொது மேலாளர் ஜோசப் , மக்கள் தொடர்பு அலுவலர் செல்வம் ஆகியோர் ஏற்பாடுகள் செய்திருந்தனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.