புதுக்கோட்டை புத்தகத் திருவிழா செஸ் போட்டியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ் பரிசுகள் ஆகஸ்ட் 4ம் தேதி வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழாவது புதுக்கோட்டை மாவட்ட புத்தகத் திருவிழாவையொட்டி புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் இன்று செஸ் போட்டி நடைபெற்றது. போட்டியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 170சதுரங்க வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். புத்தகத் திருவிழா அமைப்பாளர்கள் சார்பாக இப்போட்டியினை புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகத்தினர் நடத்தினர். இப்போட்டியினை மன்னர் கல்லூரியில் முதல்வர் முனைவர் புவனேஸ்வரி தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழக நிர்வாகிகள் முனைவர் கணேசன், புதுகை செல்வம், அடைக்கலவன், சர்வதேச நடுவர் அங்கப்பன் பார்த்திபன், டாக்டர் கோபால், சேதுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் ஆகஸ்ட் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு புத்தகத் திருவிழா அரங்கில் வழங்கப்படும் என புத்தக திருவிழா அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.