புதுகை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் அரசு மதுபானக்கடைகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து தெருமுனைப் பிரச்சாரம் புதுகை சட்டமன்றத் தொகுதி செயலாளர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது. இந்த தெருமுனைப்பிரச்சாரத்திற்கு விக்னேசுவரன் முன்னிலை வகித்தார். வாகனம் மூலம் காட்டுப்பட்டி கூத்தாச்சிப்பட்டி மங்களத்துப்பட்டி மேட்டுப்பட்டி பெருங்களூர் உள்ளிட்ட கிராமங்களில் மாநில கொள்கை பரப்புச்செயலாளர் ஜெயசீலன் கலந்துகொண்டு தமிழக அரசால் டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படும் மதுவினால் கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடக்கின்றது. தமிழகத்தில் திமுக அதிமுக மாறி மாறி ஆட்சி செய்தாலும் மது விலக்கு அமல்படுத்தப்போவதில்லை. மதுவை வைத்தே ஆட்சி நடத்தும் கட்சிகளாக உள்ளன. நாம் தமிழர் கட்சி ஆட்சியமைத்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் உள்ளிட்ட அரசு மதுபாணக்கடையால் ஏற்படும் பல்வேறு விளைவுகள் குறித்து எடுத்துரைத்தார். இந்த தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.