புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 7-வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள் மாவட்ட அளவில் மா.மன்னர் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் ஏற்கனவே நடத்தப்பட்ட பேச்சு, கவிதை, ஓவியப் போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் மட்டும் இப்போட்டியில் கலந்து கொண்டனர். போட்டிகளை மாமன்னர் கல்லூரியின் முதல்வர் புவனேஸ்வரி தொடங்கி வைத்தார். புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் தங்கம் மூர்த்தி, வீரமுத்து, எஸ்.டி.பாலகிருஷ்ணன், சதாசிவம், கீதா போட்டிகள் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் விஸ்வநாதன், கும.திருப்பதி, மகா சுந்தர், குமரேசன், பீர் முகமது ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
போட்டிகளின் நடுவர்களாக மைதிலி, கஸ்தூரிரங்கன், எழுத்தாளர் அன்டனூர் சுரா மாலதி, கிருஷ்ணவேணி, மதியழகன், ரேவதி, கீதாஞ்சலி, ராமதிலகம், மணிமேகலை, கெஜலஷ்மி, உஷா, ஆண்டியப்பன், பிரகாஷ், சித்ரகலா ரவி, ஓவியர் புகழேந்தி ஆகியோர் செயல்பட்டனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் அனைத்து போட்டிகளின் முடிவுகளையும் வெளியிட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு புத்தகங்களை வழங்கி, பாராட்டி பேசினார்.
இப்போட்டிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான பேச்சுப் போட்டியில் மவுண்ட் சீயோன் பள்ளி மாணவர் சக்திதரன் முதல் பரிசையும், வேதியங்குடி ந.நி.பள்ளி மாணவி ரக்ஷா ஸ்ரீ இரண்டாம் பரிசையும், வேந்தன்பட்டி செயின்ட் ஜோசப் பள்ளி மாணவி ஹம்சவர்த்தினி மூன்றாம் பரிசையும் பெற்றார். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பேச்சுப் போட்டியில் கறம்பக்குடி ரீனா மெர்சி மெட்ரிக் பள்ளி மாணவி ஐஸ்வர்யா முதல் பரிசையும், கீரனூர் அரசு ஆண்கள் பள்ளி மாணவர் நீதிமான் இரண்டாம் பரிசையும் ஆலங்குடி மகளிர் பள்ளி மாணவி தமன்னா ரோஸ்னி மூன்றாம் பரிசையும் பெற்றார்.
11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பேச்சுப் போட்டியில் இராணியார் மேல்நிலைப்பள்ளி மாணவி சஞ்சனா முதல் பரிசையும், ந.புதூர் அன்னை பள்ளி மாணவர் புவனேஸ்வரன் இரண்டாம் பரிசையும், பொன்னமராவதி அமல அன்னை பள்ளி மாணவி பிரதீபாஸ்ரீ மூன்றாம் பரிசையும் பெற்றார். ஆறு ,ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் பொன்னமராவதி அமல அன்னை பள்ளி மாணவர் முகிலன் முதல் பரிசையும், கந்தர்வகோட்டை பெண்கள் பள்ளி மாணவி அட்சயஸ்ரீ இரண்டாம் பரிசையும், ந.புதூர் அன்னை பள்ளி மாணவி சோஸ்மிதா மூன்றாம் பரிசையும் பெற்றார்.
ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் ஒத்தைப்புளிக்குடியிருப்பு மாணவி ராஜேஸ்வரி முதல் பரிசையும், அன்னவாசல் மகளிர் பள்ளி மாணவி ஓவியா இரண்டாம் இடத்தையும், அமரடக்கி உயர்நிலைப்பள்ளி மாணவி லோகிதா மூன்றாம் பரிசையும் பெற்றார். 11-12ஆம் வகுப்பு களுக்கான கவிதைப் போட்டியில் பொன்னமராவதி அமல அன்னை பள்ளி மாணவர் விஜய ராமானுஜம் முதல் பரிசையும், இலுப்பூர் அரசுப் பள்ளி மாணவி ஹேமலதா இரண்டாம் பரிசையும், ஆலங்குடி அரசுப் பள்ளி மாணவர் மணிகண்ட பாலமுருகன் மூன்றாவது பரிசையும் பெற்றார்.
6, 7, 8 வகுப்புகளுக்கான ஓவியப் போட்டியில் மவுண்ட் சீயோன் பள்ளி மாணவி திரிஷிதா முதல் பரிசையும், அன்னவாசல் அரசுப் பெண்கள் பள்ளி மாணவி ஜமீமா பேகம் இரண்டாம் இடத்தையும், ஆவணத்தான்கோட்டை நடுநிலைப்பள்ளி மாணவர் ஜெயராம் மூன்றாம் இடத்தையும் பெற்றார். 9-10 வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப் போட்டியில் அறந்தாங்கி மாதிரிப் பள்ளி மாணவர் விஷ்ணு முதலிடத்தையும், வடகாடு அரசுப் பள்ளி மாணவி மதிவதனி இரண்டாம் இடத்தையும், கறம்பக்குடி அரசுப் பெண்கள் பள்ளி மாணவி வர்ணிகா மூன்றாம் இடத்தையும் பெற்றார்.
11-12 வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப் போட்டியில் இராணியார் பள்ளி மாணவி விவேகி முதலிடத்தையும், ஆவுடையார் கோவில் பெண்கள் பள்ளி மாணவி காவியா இரண்டாம் இடத்தையும், மணமேல்குடி அரசு பள்ளி மாணவன் கோகிலன் மூன்றாம் இடத்தையும் பெற்றார். இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள், வானவில் மன்ற கருத்தாளர்கள், மாணவர்கள், வழிகாட்டி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.