புதுக்கோட்டையில் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள் பேச்சுப்போட்டி

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவரான முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நேற்று புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  பல்வேறு பள்ளிகளில் இருந்து 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில்  முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) கூ.சண்முகம் கலந்துகொண்டு  போட்டிக்குத் தலைமைதாங்கி வெற்றிபெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுக் காசோலைகளும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி வாழ்த்து தெரிவித்து பேசும்போது கூறியதாவது, ”முத்தமிழறிஞர் கலைஞரையும், மாணவச்செல்வங்களுக்கு அவர் கொண்டு வந்த திட்டங்களையும் தெரியாத மாணவர்களே இருக்க இயலாது எனவும், தன்னிகரற்ற தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரை முன்மாதிரியாகக் கொண்டு மாணவச்செல்வங்கள் பிற்காலத்தில் சிறந்த தலைவர்களாவும், பேச்சாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், இலக்கியவாதிகளாகவும் திகழ வேண்டும் என்பதே இத்தகைய போட்டிகளின் நோக்கமாகும். போட்டிகளில் தைரியத்துடன் கலந்துகொள்வதே வெற்றிக்கு முதல்படி” என்று கூறி போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசினார்.

மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற செவ்வாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி தீஷாவிற்கு முதல் பரிசான ரூ. 5000 க்கான காசோலை மற்றும் பாராட்டுச்சான்றிதழும், இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி மெய்வர்சிதாவிற்கு இரண்டாம் பரிசான ரூ. 3000 க்கான காசோலை மற்றும் பாராட்டுச்சான்றிதழும், நேரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி அகநாவிற்கு மூன்றாம் பரிசான ரூ. 2000 க்கான காசோலை மற்றும் பாராட்டுச்சான்றிதழும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக தலா ரூ. 2000க்கான காசோலை மற்றும் பாராட்டுச்சான்றிதழை கொத்தமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சிவதன்யா, சத்தியமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி சுபாஷினி ஆகியோருக்கும் வழங்கி பாராட்டினார்கள். தமிழாசிரியர்கள் மு.பரமசிவம்,  ச.கோவர்த்தினி,  த.ரேவதி ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெ.சி.சாலைசெந்தில், பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி,  பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் ம.வசந்தி, தமிழ் வளர்ச்சித்துறையின் சுப்புராமன்  மற்றும் பலர் கலந்துகொண்டனர். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் ஜ.சபீர்பானு தலைமையிலான தமிழ் வளர்ச்சித் துறையினர் போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.