கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் ஒரு சிறுவன் உயிரிழந்ததை அடுத்து மாநில நிர்வாகம் பல்வேறு முன்னேற்றத்திற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு எல்லைப் பகுதியாக இருக்கக்கூடிய கீழ நாடு காணி சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை செய்த பிறகு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தான். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, மலப்புரத்தில் சுகாதாரத் துறை கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது, அங்கு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் முகமூடி அணிய அறிவுறுத்தப்பட்டனர். சிறுவன் வசித்த கிராமமான பாண்டிக்காடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் லாக்டவுன்கள் நடைமுறையில் உள்ளன.
கேரளாவில் 2018 ஆம் ஆண்டு முதல் 5 நிபா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை, 2018-ல் கோழிக்கோடு ஒருவரும், 2019-ல் கொச்சியில் மற்றொருவரும், 2023-ல் கோழிக்கோடு நான்கு நோயாளிகளும் உயிர் பிழைத்துள்ளனர். 2018-ல் பாதிக்கப்பட்ட 18 பேரில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் 2021 இல், ஒரு மரணம் இருந்தது. 2023 ஆம் ஆண்டில், இரண்டு நிபா மரணங்கள் பதிவாகியுள்ளது என தெரிவித்திருந்தார்.
https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-1112317142011070&output=html&h=280&adk=29074288&adf=3065011005&w=780&abgtt=6&fwrn=4&fwrnh=100&lmt=1721723362&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=8953348062&ad_type=text_image&format=780×280&url=https%3A%2F%2Fwww.dinakaran.com%2Fnipahvirus-tamilnadu-kerala-border-monitoring-intensity%2F&fwr=0&pra=3&rh=195&rw=779&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTI2LjAuNjQ3OC4xMjgiLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siTm90L0EpQnJhbmQiLCI4LjAuMC4wIl0sWyJDaHJvbWl1bSIsIjEyNi4wLjY0NzguMTI4Il0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTI2LjAuNjQ3OC4xMjgiXV0sMF0.&dt=1721723361981&bpp=2&bdt=1205&idt=-M&shv=r20240718&mjsv=m202407180101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D06366a4769232505-22cb9311b6e70068%3AT%3D1690436237%3ART%3D1721723515%3AS%3DALNI_Mab4swHDlqLtt6upoxUyS8NI1uT8g&gpic=UID%3D00000d1fb77a91e3%3AT%3D1690436237%3ART%3D1721377103%3AS%3DALNI_Ma8-YGeqDadvssu_RjDKSqxUjFmiA&eo_id_str=ID%3D8debf9691f5510ff%3AT%3D1706615541%3ART%3D1721723515%3AS%3DAA-AfjZQEWaHYyOAAvgFYbXmNc_k&prev_fmts=0x0%2C728x90%2C300x600%2C300x250%2C300x250%2C300x250%2C1005x124%2C780x280&nras=4&correlator=765788715129&rume=1&frm=20&pv=1&ga_vid=12427675.1690436228&ga_sid=1721723361&ga_hid=156629991&ga_fc=1&u_tz=330&u_his=4&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=0.9&dmc=8&adx=164&ady=1759&biw=1498&bih=674&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759837%2C44795921%2C95333410%2C95334524%2C95334828%2C95337870%2C95338253%2C95335247%2C31084187%2C31061691%2C31061692%2C31078663%2C31078665%2C31078668%2C31078670&oid=2&pvsid=1347768230037351&tmod=2010432949&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.dinakaran.com%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1517%2C674&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=0.9&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=9&uci=a!9&btvi=6&fsb=1&dtd=148 இதனிடையே சிறுவனுடன் தொடர்பில் இருந்த நபர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே கேரளாவின் சில பகுதிகளில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ள நிலையில், தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தை ஒட்டி இருக்கும் தமிழ்நாடு – கேரளா எல்லை பகுதிகளில் சுகாதாரத் துறையினர் இன்று காலை முதல் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக வாளையார் சோதனை சாவடியில் முழு கவச உடை அணிந்த தமிழக சுகாதாரத் துறை ஊழியர்கள், பேருந்து மற்றும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்ட பின்னரே அனுமதிக்கின்றனர். கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்குள் வரும் 13 வழித்தடங்களிலும் சுகாதார துறையினர் இதேபோல சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளுடன் வருபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது கேரள மாநிலத்தில் தற்பொழுது ஐந்தாவது முறையாக நிபா வைரஸ் காய்ச்சல் தாக்கம் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது.