புதுக்கோட்டை ஸம்ஸ்க்ருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றது.
இதன் துவக்க விழாவில் புதுக்கோட்டை மாவட்ட சிலம்ப வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் மாருதி கண.மோகன்ராஜ் தலைமை வகித்தார். இந்திய சிலம்ப வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் மாஸ்டர் பாலசுப்ரமணியம், புதுக்கோட்டை கிரவுண்ட் சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் சிவசக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், மேனாள் நகர் மன்ற தலைவர் துரை திவ்ய நாதன் ஆகியோர் பெண் வீரர்களுக்கான போட்டிகளை துவங்கி வைத்தார்கள். ரோட்டரி மாவட்டம் 3000-ன் 2025 -26 ஆண்டின் மாவட்ட ஆளுநர் ஜெ.கார்த்திக், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் வி.ஆர்.எம்.தங்கராஜ், செயலாளர் கே.ஓம்ராஜ், முன்னாள் தலைவர் பி.அசோகன், முன்னாள் பொருளாளர் ஆர்.சங்கர், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஏ.எம்.எஸ்.இப்ராஹிம் பாபு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் ஆகியோர் ஆண் வீரர்களுக்கான போட்டியினை துவங்கி வைத்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ஸம்ஸ்க்ருத வித்யாலயா ஓரியண்டல் பள்ளியின் தலைவர் இளைய மன்னர் ராஜ்குமார் விஜயகுமார தொண்டைமான், சி.எஸ்.கே.பவுண்டேஷன் நிறுவனர் சித்திரை செல்வகுமார், எம்.எம்.பாலு, க.நைனா முகமது, சிலம்ப வளர்ச்சி அறக்கட்டளையின் மாநிலச் செயலாளர் சண்முகம், திருச்சி மாவட்ட சிலம்பு வளர்ச்சி அறக்கட்டளையின் செயலாளர் நித்யா பொருளாளர் கார்த்திக் ரகுநாத், புதுக்கோட்டை மாவட்ட சிலம்ப வளர்ச்சி அறக்கட்டளை செயலாளர் சக்தி கணேஷ், பொருளாளர் ஆனந்த், மாவட்ட சட்ட ஆலோசகர் புவனேஷ்வரன் ஆகியோர் பரிசுகள் வழங்கி வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்தினார்.
முன்னதாக வருகை தந்த அனைவரையும் புத்தஸ் வீரக்கலை கழகத்தின் பயிற்சியாளர் சுஜிதா வரவேற்றார். போட்டிகள் அமைப்புச் செயலாளர் ரங்கநாதன் நன்றி கூறினார். பயிற்சியாளர்கள் சரவணன், ஜீவா, ஆன்டனி, லோகேஷ் ஆகியோர் போட்டியினை ஒருங்கிணைத்தனர். போட்டியில் 600க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் மற்றும் சுமார் 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அடுத்ததாக சிலம்ப வளர்ச்சி அறக்கட்டளை சார்பாக நடத்தவிருக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று நிர்வாகிகள் அறிவித்தார்கள்.