புதுக்கோட்டை மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தீண்டாமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை, மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு மற்றும் அது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது பள்ளி முதல்வர் பெ.சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தீண்டாமை ஒழிப்பு குறித்து புதுக்கோட்டை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு காவல் துறை துணை கண்காணிப்பாளர் பரத் சீனிவாஸ் மாணவர்களுடையே உரையாற்றினார். மேலும் அவர் மாணவர்கள் பிற மாணவர்களுடன் சகோதர மனப்பான்மையுடனும், சமூக வேறுபாடு காட்டாது அனைவருடனும் நட்பாக பழக வேண்டும் என்றும் இப்பருவத்தில் கடினமாக உழைத்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றும் பேசினார். மேலும் மாணவர்களாகிய நீங்கள் தீய வழியில் செல்லும் பட்சத்தில் அது உங்களுடைய எதிர்காலத்தை முற்றிலும் பாதிக்கும் என்றும் நன்றாகக் கல்வி பயின்று பள்ளிக்கும், பள்ளியில் பணியாற்றக் கூடிய    ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் பேசினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு துணை காவல் ஆய்வாளர் பென்னரசி மற்றும் தலைமை காவலர் மாரியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை ஆசிரியர் பிரபு வரவேற்று பேசினார். இறுதியில் நிகழ்ச்சியை சிறப்பித்த அனைவருக்கும் ஆசிரியர் இன்பராஜ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.