மேக்கரை அடவி நயினார்கோவில் நீர் தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடி செய்வதற்கு விவசாயத்திற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம் மேக்கரை கிராமத்தில் உள்ள அடவி நயினார் நீர் தேக்கத்தின் தண்ணீரின் அளவு மற்றும் எதிர்பார்க்கப்படும் மழையின் நீர்வரத்தினை பொறுத்து அடவி நயினார்கோவில் நீர்த்தேக்க பாசனம் மேட்டுக்கால், கரிசல்கால், பண்பொழிகால், வல்லக்குளம் கால், இலத்தூர் கால், நயினாரகரம் கால், கிளங்காடு கால், கம்பிளி கால், புங்கன் கால் மற்றும் சாம்பவர் வடகரை கால்வாய் ஆகியவற்றின் நேரடி பாசனம் 2147.47 ஏக்கர் நிலங்களுக்கு 1434-ம் பசலி கார் சாகுபடி செய்வதற்கு அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து 19.07.2024 முதல் 31.10.2024 முடிய 105 நாட்களுக்கு நீர் இருப்பை பொறுத்து வினாடிக்கு 60 கனஅடிக்கு மிகாமல் பாசன பருவ காலத்தின் மொத்த தேவை தண்ணீர் அளவான 268.43 மில்லியன் கன அடிக்கு மிகாமல் விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு ஆளுநரின் ஆணைப்படி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசகன் அரசு ஆணைப்படி, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில் அடவிநயினார் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர் அமிர்தலிங்கம், வட்டாட்சியர் சத்தியவல்லி, தலைமை பொறியாளர் அண்ணாதுரை, உதவி பொறியாளர் சரவணகுமார், வருவாயை அலுவலர், மற்றும் நீர்வள, பொதுபணித்துறை பணியாளர்கள், மற்றும் திமுக தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர், வடகரை சேர்மன் ஷேக் தாவுது, மாவட்ட பொருளாளர் ஷெரிப், முகமது இஸ்மாயில் செங்குளம் வடகரை, மாவட்ட விவசாய துணை அமைப்பாளர் எம்.எச்.ஹனி, சமூக ஆர்வலர் வா.வா.மைதீன், சாகிர் உசேன், கவுன்சிலர் ரஹ்மத்துல்லா, அலி, கட்டகுட்டி ராசா, வடகரை விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.