தென்காசி மாவட்டம், புன்னையாபுரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நீதிமன்ற வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பூங்காக்கள் திறந்து வைக்கப்பட்டது. மேலும் புன்னையாபுரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2022 – 2023 ஒன்று முதல் ஐந்து வரை உள்ள பள்ளி ஈரடுக்கு அடுக்குமாடி வகுப்பறைகள் ரூ.83,20,000-லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்துவைக்கப்பட்டது.
இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அன்பில் பொய்யாமொழி, உள்துறை செயலாளர் கலந்துகொண்ட காணொளி நிகழ்ச்சியில் பொன்னையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி கண்ணன் தலைமையில், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் புன்னையாபுரம் ஆ.மணிகண்டன் குத்துவிளக்கேற்றி பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
வட்டார கல்வி அலுவலர் எஸ்.முத்துலிங்கம், ஊராட்சி துணைத் தலைவர் திருமலை வேலூ, வார்டு உறுப்பினர் எம்.ராதா, புன்னையாபுரம் ஊராட்சி செயலர் தங்கத்துரை, ஊராட்சி மன்ற நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ச.சக்திலதா, ஆசிரியைகள் மூ.செல்வி, கு.ராணி, பா.தாமரைச்செல்வி, பெ.மரியபுஷ்பம், மா.தமயந்தி, ச.சீதாலட்சுமி, த.ராஜலட்சுமி, மு.மாரியம்மாள், வை.ராஜேஸ்வரி, உ.சங்கர ஜோதி, சத்துணவு அமைப்பாளர் எம்.பார்வதி, முத்துச்செல்வி, அம்பிகா மற்றும் அரசு ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரன் பிற பணியாளர்கள் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.