கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஏழாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடமாடும் நூலக பேருந்து மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்,  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் ஏழாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி கல்லூரியின் விளையாட்டு அரங்கத்தில் வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 5 வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளது. ஏழாவது புத்தகத் திருவிழாவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடமாடும் நூலக பேருந்து மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இல்லம் தேடிக் கல்வி திட்ட புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கலையரசன், கந்தர்வகோட்டை ஒன்றிய துணைவட்டார வளர்ச்சி அலுவலர் மதியழகன், கந்தர்வக்கோட்டை கிளை நூலகர்கள்  இராமசாமி, வனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றியச் செயலாளர் ரகமதுல்லா பேசும் பொழுது, புதுக்கோட்டை புத்தகத் திருவிழா புதுக்கோட்டையை அறிவுச் சமூகமாக மாற்றுவதற்கு தொடர்ந்து முயல்கிறது என்றும், மாணவர்கள், பொதுமக்கள் இப்புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கி படித்து வருங்காலத்தில் சிறந்த அரசியல் தலைவர்கள், பொருளாதார அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் உள்ளிட்ட அரசு உயர் பொறுப்புகளுக்கு வர பல்வேறு தலைப்புகளில் இருக்கும் புத்தகங்களை வாங்கி வாசித்து வளர வேண்டும் என்று  பேசினார்.

நடமாடும் நூலக பேருந்து கிராமப்புற பொதுமக்கள், இளைஞர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு ஊழியர் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் நடமாடும் நூலக பேருந்து இருந்த  நூலக புத்தகத்தை வாசித்தனர்.