ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பெமி ஹெல்த் கேர் நிறுவனத்தை சேர்ந்த தாரணி கலந்து கொண்டு உரையாற்றினர். அவர் பேசும்போது ”புதுக்கோட்டையில் வேறு எந்தப் பள்ளியிலும் இல்லாத வகையில் மாணவ மாணவிகளுக்கு வகுப்பறைப் பாடங்களைத் தாண்டி வாழ்வியல் அனுபவங்களை, ஆரோக்கியத்தை சுகாதாரத்தைக் கற்றுத் தருவதில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி முனைப்போடு இருக்கின்றார். அந்த வகையில் உங்களோடு ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு பற்றி கலந்துரையாடுவதில் பெருமைப்படுகின்றேன்.

”பெண்கள் மாதவிலக்கு நாட்களில் பயன்படுத்தும் நாப்கின்கள் (அணையாடை) சுகாதாரமானதாக இருக்க வேண்டும். தரமற்ற நாப்கின்களில் உள்ள டையாக்சின், குளோரின், சிலிகான் ஜெல்.பிளீச்சிங், நறுமணங்கள் சாயங்கள் போன்ற தீங்கு விளைவிக்க கூடிய ரசாயணப்பொருள்களால் உடலில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக மலட்டுத்தன்மை, கர்ப்பபை கேன்சர், போன்ற பல்வேறு பிரச்சனைக்கு பெண்கள் ஆளாகின்றனர். பள்ளியில் படிக்கின்ற பெண்கள் மாதவிலக்கு நாட்களில் வலியோடு போராடி மன உளைச்சல் ஆகவேண்டாம். ஆரோக்கிமாக பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்ட நாப்கின்களை பயன்படுத்த வேண்டும் என்று பேசினார். நிகழ்வில் பெமி கேர் நிறுவத்தைச் சேரந்த குமரேசன் மற்றும் பள்ளி ஆசிரியைகள் ஆனந்தி, சுகுனா மற்றும் ஏராளமான மாணவிகள் கலந்த கொண்டனர்.