திருச்சி பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பாக ‘உலக மக்கள் தொகை தினம்’ கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் கா.வாசுதேவன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி மாவட்ட வருவாய் அலுவலர் (எல்.ஏ & எம்) இரா.பாலாஜி கலந்து கொண்டு உலகில் இருக்கும் அத்தனை மனிதர்களுக்கும் உணவு உறைவிடம் மற்றும் அறிவாற்றல் ஆகியவை கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அரசுகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. வளமான மனித இனமே நல்ல சமூகம் உருவாகக் காரணமாகிறது. மாணவர்களும் இதனை அறிந்து கொண்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளவேண்டும் என்று பேசினார்.
முன்னதாக தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் மற்றும் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலரும் திருச்சிராப்பள்ளி மாவட்ட யூத் ரெட் கிராஸ் பொறுப்பாளருமான முனைவர் இரா.குணசேகரன் வரவேற்றார். கல்லூரி நூலகர் முனைவர் இரா.பார்த்தசாரதி நன்றியுரையாற்றினார். விழாவில் 1100 யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.