ஆதனக்கோட்டை அருகே மஹா முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
புதுக்கோட்டை தாலுகா ஆதனக்கோட்டை அருகே உள்ள பி.மாத்தூர் கிராமத்தில் புதிதாக மஹா முத்துமாரியம்மன் ஆலயம் ஏற்படுத்த பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. ஆலயப் கட்டுமானப்பணிகள் புணரமைக்கப்பட்டு நிறைவுபெற்றதை தொடர்ந்து ஶ்ரீ ஹா முத்துமாரியம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிபிஷேகம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்துவந்தனர்.
காவிரி வைகை என பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீரை ஐந்து நாட்கள் யாகசாலை பூஜையில் வைத்து நாள்தோறும் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அந்த பூஜையில் அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லஷ்மி ஹோமம் வாஸ்து சாந்தி ஆகியவை முதல்கால யாகசாலை பூஜையிலும், புண்யயாகம் பஞ்சகவ்யம் மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, கோபூஜை, கன்யா,பூஜை கஜ,பூஜை என ஐந்து நாட்கள் நடைபெற்ற நான்கு கால பூஜையிலும் வேதபாராயணம், திருமுறை பாராயணம் நடைபெற்று பூர்ணாஹூதி தீபாராதனையும் காட்டப்பட்டது.
யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு குதிரைகள் அணிவகுத்து முன்னே செல்ல சிவாச்சாரியார்கள் தீர்த்தக் குடத்தை தலையில் சுமந்தபடி முத்துமாரியம்மன் ஆலயத்தை வலம்வந்து யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை வானில் கருட பகவான் வட்டமிட பெருங்களூர் ஞானாஸ்கந்தாஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் வேத ஆகமமுறைப்படி ஆலய கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மஹா முத்துமாரியம்மனுக்கு மூலஸ்தான அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் சம்பட்டிவிடுதி, டி.களபம், மூக்கம்பட்டி, மேலவிடுதி, கீழப்பட்டி, மழையூர், வடவாளம், இச்சடி, எம்.குளவாய்ப்பட்டி, மனவிடுதி, கம்மங்காடு, வாராப்பூர், பெருங்கொண்டான்விடுதி, மாந்தாங்குடி, சின்னையாசத்திரம், கூலியான்விடுதி, துவரங்கொல்லைப்பட்டி, நரியன்கொள்ளப்பட்டி, மாங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது.