தத்தனூர் எம்.ஆர்.கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நான்கு நாள் பயிற்சி முகாம்

தத்தனூர் எம்.ஆர். கல்லூரி முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு நான்கு நாள் பயிற்சி முகாம் துவங்கியது.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அடுத்துள்ள, தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு, பிரிட்ஜ் கோர்ஸ் ப்ரோக்ராம் எனப்படும் (BRIDGE COURSE PROGRAM) நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இதன் துவக்கவிழா நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் தாளாளர் எம்.ஆர்.இரகுநாதன் தலைமை தாங்கினார்.
இயக்குநர் முனைவர் ஆர்.இராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார்.
முதல்வர் முனைவர் ப.சங்கீதா  வரவேற்புரையாற்றினார்.

தலைமை உரையில் கல்லூரி தாளாளர் எம்.ஆர். ரகுநாதன் பேசுகையில், கல்லூரி படிப்பின் முக்கியத்துவம் பற்றியும், மாணவர்களின் சுய ஒழுக்கம் மற்றும் எதிர்காலம் பற்றியும் விளக்கி, எதிர்காலத்தில் மாணவர்கள் உயர் பதவிகளை அடைவதற்கு உரிய வழிமுறைகளையும் வழங்கினார்.

தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளில், ஆங்கிலத் துறைப் பேராசிரியர் முத்தமிழ்செல்வன், தமிழ்த்துறை தலைவர் முனைவர் இரா.லதா, தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் கு.சந்திரசேகர்,  வேதியியல் துறை தலைவர் ப.ஸ்டீபன், ஆங்கில துறை பேராசிரியை இந்துஜா,
பயோடெக்னாலஜி துறைத்தலைவர் முனைவர் ஷிபிலா, உடற்கல்வியல் துறைத்தலைவர் முனைவர் திருமுருகன், வணிகவியல் துறைத்தலைவர் சௌந்தரராஜன், காட்சி தொடர்பில் துறைத்தலைவர் பேராசிரியர் சிலம்பரசன், ஆங்கிலத்துறை பேராசிரியர் ரஞ்சித்குமார்,  கணிதத்துறை பேராசிரியர் கு.கண்ணன், உள்ளிட்டோர் பேசினர். இறுதியில்  கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியினை  கணிதத்துறைத் தலைவர் பா.இளங்கோமணி தொகுத்து வழங்கி, நன்றி கூறினார். முன்னதாக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் துறைத்தலைவர்கள்  மற்றும் பேராசிரியர்,  பேராசிரியைகள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.