‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்வில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு


7-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, இன்று நடைபெற்ற ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 7-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை வருகின்ற ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதிவரை புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி விiளாயட்டு மைதானத்தில் நடத்துகிறது. இந்தப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு ‘புதுக்கோட்டை புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், நூலகம், பூக்கடை, காய்கறிக்கடை, வர்த்தக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்றது.

புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்நிகழ்வை புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி(பொ), கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் (பொ), கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம்மூர்த்தி, அ.மணவாளன், எம்.வீரமுத்து, எஸ்.டி.பாலகிரு~;ணன், ஜீவி, க.சகாசிவம், விமலா, ராசி.பன்னீர்செல்வன், பவுனம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர். கடந்த 6 புத்தகத் திருவிழா புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற்றது. புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது, காய்கறி, பூக்கடை உள்ளிட்ட சிறுகடை வியாபரிகள் வர்த்தக தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளது சிறப்புக்குறிய ஒன்றாகும். அனைத்துப் பகுதியினரையும் வாசிக்கப் பழக்க வேண்டும் என இலக்கை நோக்கி புத்தகத்திருவிழா சென்றுகொண்டிருக்கிறது.

ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாவிற்கு வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இட நெருக்கடியை சமாளிப்பதற்காக 7-ஆவது புத்தகத் திருவிழாவை வரலாற்றுச் சிறப்புமிக்க மாமன்னர் கல்லூரி திடலில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டு 107 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வருடம் 120 அரங்குகள் வரை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம். அது மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்ச்சிகள், கோளரங்கங்கள், மூன்று முதல் 5 வயது குழந்தைகளை எப்படி படிக்கப் பழக்குவது என்பதற்கான பயிற்சிகள் எனத் திட்டமிட்டு இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்த உள்ளோம்.

குடிநீர், கழிப்பறை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கும் சிறப்பாக செய்துதரப்பட உள்ளது. மக்கள் பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், வேளாண்மைத்துறையினர், வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரையும் ஒருங்கிணைத்து புத்தகத்திருவிழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார். பின்னர், புத்தகத் திருவிழா நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். கறம்பக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சின்னதுரை கலந்துகொண்டு வாசிப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தார். வட்டாட்சியர் ஜபருல்லா, கல்லூரி முதல்வர் (பொ) ந.சுலோச்சனா, புத்தகத்திருவிழா ஒருங்கிணைப்பாளர் மு.முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.