சிந்தாமணியில் இலவச மருத்துவ முகாம்

தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட  சிந்தாமணியை சேர்ந்த ஸ்ரீ கணபதி முருகன் குரூப்ஸ் பா.முருகையா நாடார் 15-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு டோல்கேட் அருகில் உள்ள  பாக்கியம் ஆர்த்தோ கிளினிக் சார்பில் இலவச மருத்துவ முகாம் மருத்துவமனை வளாகத்தில்  நடைபெற்றது.

முகாமிற்கு புளியங்குடி ரோட்டரி கிளப் தலைவர் எஸ்.ஆறுமுகச்சாமி தலைமை வகித்தார். புளியங்குடி லயன்ஸ் கிளப் தலைவர் ஆசிரியர் ஆர்.முரளிதரன், சிந்தாமணி பொதுநல மருத்துவர் ஆர்.பிரியதர்ஷினி, புளியங்குடி ஸ்ரீ அமராவதி பாரா மெடிக்கல் தாளாளர் கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ கணபதி முருகன் சா மில் உரிமையாளர் பா.கருப்பையா கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

சிந்தாமணி பாக்கியம் ஆர்த்தோ கிளினிக்  எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று  சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.சுரேஷ் குமார் மருத்துவ பரிசோதனை செய்தார். முகாமில்  எலும்பு முறிவு, கழுத்து வலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி, மூட்டு மாற்று, முதுகு தண்டுவடம் சிகிச்சை, ஜவ்வு காயங்கள், தசைப்பிடிப்பு, 40 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மான சிகிச்சை வாத நோய்கள் மற்றும் நரம்பியல் நோயை சிகிச்சை, குழந்தைகள் கால் வளைவு சரி செய்தல், முதுகு தண்டுவடம் சிகிச்சை, குதிகால் வலி, எலும்பு சம்பந்தமான எக்ஸ்ரே, 50% சலுகை ஊசிகள், ரூபாய் 2000 மதிப்புள்ள எலும்பு உறுதி பரிசோதனை (பிஎம்டி) முற்றிலும் இலவசமாகவும், மருத்துவர் ஆலோசனை மற்றும்  இலவசமாக மாத்திரைகள், சர்க்கரை ரத்த அழுத்த சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிந்தாமணி  தொழிலதிபர்கள் அன்னமணி, மாடசாமி, நாராயணன், கணேசன், பாலசுப்பிரமணியன், மருத்துவமனை நர்ஸ்கள் மற்றும் ஸ்ரீ கணபதி முருகன் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் புளியங்குடி, சிந்தாமணி, வாசுதேவநல்லூர், இராமநாதபுரம், இராயகிரி, சிவகிரி, திருவேட்டநல்லூர், பாம்பு கோவில், முள்ளிக்குளம் ஆகிய ஊர்களில் இருந்து  பள்ளி, கல்லூரி பயிலும் மாணவர்கள், வயதான ஆண்கள், பெண்கள் 250 பேர் கலந்து கொண்டனர்.