கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் உலக தோல் ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு இலவச சிகிச்சை முகாம்

கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் உலக தோல் ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு இந்திய தோல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம், மற்றும் இலவச சிகிச்சை முகாம்  இன்று நடைபெற்றது. விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை தாங்கினார். நிர்வாக அறங்காவலர் அ.கிருஷண்மூர்த்தி, இயக்குநர் முனைவர் மா.குமதா, மக்கள் கவிஞர் மு.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுகை டெர்மா கிளப் தலைவர் மருத்துவர் டி.கிருஷ்ணராஜ் தொடக்கவுரையாற்றினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக தோல் நோய் மருத்துவர் மற்றும் அழகுக் சிகிச்சை நிபுணர் வே.ரம்யா மாதுரி  கலந்து கொண்டு இலவச சிகிச்சை முகாமை தொடங்கி வைத்து பேசியது- உடல் உறுப்புகளிலேயே மிகப்பெரியது தோல். உள்ளுறுப்புகள் புற பாதிப்புகளால் தாக்கப்படாமல் காக்கும் கேடயமே தோல். கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலம் அறிமுகப்படுத்தப்படும். வேதிப்பொhருட்கள் சேர்க்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களை உபயோகப் படுத்தினால் தான் முகமும், உடலும் மினுமினுப்பாக இருக்கும் என்பது ஒரு தவறான கருத்தாகும். மேலும். விரைவில் அழகு கூட்ட வேண்டும் என்ற நோக்கில் பயன்படுத்தப்படும் ரசாயனம் கலந்த முகப்பூச்சுகள் தோலில் தடவும் களிம்புகள் பல நேரங்களில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.

தோல் நிறங்களைப்  பொநுத்தவரைக்கும் நாடுகளுக்கு நாடு வேறுபடலாம். ஆனால் அவர்கள் வெள்ளையாக இருக்கிறார்கள். நாம் கருப்பாக இருக்கிறோம் என்று வேதனைப் படக்கூடாது. ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து கிட்டத்தட்ட 1மில்லியன் விற்பணை செய்யப்பட்ட ஒரு களிம்பு நிறைய பேருக்கு பல்வேறான பிரச்னைகளை ஏற்படுத்தியது. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்கள் மருத்துவரிடம் பரிசோதனை செய்யாமல் அதனைப் பயன்படுத்தினர்.

திடீரென்று முகத்தில் அரிப்பு எதாவது தோன்றுகிறது என்றால். இணையத்தில் போய் அதற்கான மருந்தை தேடிக் கண்டுப்பிடித்து வாங்கி உபயோகம் செய்யக்கூடாது. மருத்துவத்துறையில் அனைத்துக்கும் தனிப்பட்ட முறையில் மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் ஆலோசனை செய்த பிறகு தான் அதனை பயன்படுத்த வேண்டும் என்றார். 

இம்முகாமில் தோல் நோய் சார்ந்த பிரச்னை உள்ள 200-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் செவிலியர்கள் சுவேதா, ரேகா, ஹரிணி, ரம்யாகிருஷ்ணன், துறைத்தலைவர்கள், உதவிப்பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முன்னதாக மருத்துவ நிர்வாகத்துறை பேராசிரியர் ப.பிரிசில்லா வரவேற்றார் முடிவில் மனையியல் துறை பேராசிரியர் எம்.லாவண்யா நன்றி கூறினார்.