தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் : மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக சுப்ரியா சாஹு நியமனம்

தமிழக அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடம் மாற்றப்பட்டனர்.

அதன்படி, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு ஊரக வளர்ச்சி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வி துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலாத் துறை செயலாளராக இருந்த மணிவாசன் நீர் வளத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நீர்வளத்துறை செயலராக இருந்த சந்தீப் சக்சேனா செய்தி மற்றும் காகித துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுப்பணித் துறை செயலாளராக இருந்த சந்திரமோகன், தற்போது சுற்றுலாத்துறை செயலாளராக நியமனம். புதிய பொதுப்பணித் துறை செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார், வனத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைத் துறை செயலாளராக செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் கேபிள் டிவி இயக்குநராக இருந்த ஜான் லூயிஸ், தற்போது தமிழக அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான இயக்குநராக நியமனம். விஜயலட்சுமி ஐஏஎஸ், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். வெங்கடாசலாம் ஐஏஎஸ், தமிழக அரசின் காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வு துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஹரிஹரன் ஐஏஎஸ், நில சீர்த்திருத்த துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். லில்லி ஐஏஎஸ், போக்குவரத்துத் துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சாய் குமார் ஐஏஎஸ், தமிழக தொழில் முதலீட்டு துறை செயலாளராக நியமனம். வைத்தியநாதன் ஐஏஎஸ், தமிழ்நாடு கேபிள் டிவியின் இயக்குநராக பணியமர்த்தப்பட்டுள்ளார். ஜவஹர் ஐஏஎஸ், சமூக சீர்த்திருத்த துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.