கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பாக, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பாக, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 21 பேரில், 11 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிசிஐடி போலீஸார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஜூன் 28-ம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பாக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா மற்றும் சின்னதுரை, நடுப்பையன், கதிரவன், கண்ணன், மாதேஷ், சக்திவேல், சிவக்குமார், பென்சிலால்,கௌதம்சந்த் ஜெயின் ஆகிய 11 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிசிஐடி போலீஸார் கடந்த 28-ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த 11 பேரையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து இன்று முதல் புதன்கிழமை மாலை வரை விசாரிப்பதற்கு நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டார். அதோடு, போலீஸார் தீவிர விசாரணைக்காக 11 பேரையும் அழைத்துச் சென்றனர்.