முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் கே .ஹச். சலீம் வழிகாட்டுதலின் படி டீம் மருத்துருவமனை சார்பாக புதுக்கோட்டை மாங்கனாம்பட்டி கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது .
முகாமிற்கு மாங்கனாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி ராமதாஸ் , துணை தலைவர், கவுன்சிலர், வார்டு உறுப்பினர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் அதிசியநாதன் முன்னிலை வகித்தார்கள் . இம்மருத்துவ முகாமில், தொற்றா நோய்களான சர்க்கரை நோய், இருதய நோய் , புற்று நோய் ,ஆஸ்துமா நோய் மற்றும் பல்வேறு நோய்கள் பற்றிய விழிப்புணர்வும ,நோய் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்பட்டன.
டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் அறிவரசு அனைவருக்கும் பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கினார் . முகாமில் இரத்த அழுத்தம் ,உயரம் ,வெப்பத்தின் அளவு, இரத்த சர்க்கரை அளவு போன்ற பரிசோதனை செய்யப்பட்டது . இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துமனையின் பொது மேலாளர் ஜோசப், மக்கள் தொடர்பு அலுவலர் செல்வம் ஆகியோர் ஏற்பாடுகள் செய்திருந்தனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.