புதுக்கோட்டை மாவட்டம் லேணா விலக்கில் அமைந்துள்ள செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பதிமூன்றாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தலைவர் ஏ.வி.எம். செல்வராஜ் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆர் வயிரவன் ஆகியோர் தலைமை வகித்தார்கள்,விழாவில் முதன்மைச் செயல் அதிகாரி ஏ.வி.எம்.எஸ். கார்த்திக், பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கே. கணேஷ் பாபு பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்ப்பித்தார்.
ஐஐடி மெட்ராஸ் முன்னாள் பேராசிரியர் சி. சுஜாதா 100க்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது, ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது, மற்றவருடன் அதை ஒப்பிட்டு பார்க்க கூடாது தங்களால் முடிந்த அளவு நல்ல செயல்களை செய்து தங்களுடைய குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், தாங்கள் பயின்ற கல்லூரிக்கும் பெருமைச் சேர்க்க வேண்டும் என்றும், தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்பதை மனதிற்கொண்டு எதிர்கொள்ள வேண்டும் என்றும் பொறியியல் துறைகளில் பல்வேறு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது அதை உணர்ந்து திறமையுடன் செயல்பட புதுமையான யுத்திகள் கையாள வேண்டும், வாழ்க்கையில் எளிதில் வெற்றிபெற ஒருவருக்கு தனிமனித ஒழுக்கம் மற்றும் சுய பாதுகாப்பு, நல்ல உணவு பழக்கவழக்கம், உடற்பயிற்சி, புது சொந்தங்கள் ஆகியவற்றை பேண வேண்டும். மேலும் நாம் வாழும் வாழ்க்கைமுறையை மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
திருச்செந்தூர் முருகன் அறக்கட்டளையின் அறங்காவலர்களான துணைத் தலைவர் சோம.நடராஜன், தாளாளர் ஏ.வி.எம். ராமையா, செயலர் தியாகராஜன், நிர்வாக இயக்குநர் எம். பாண்டிகிருஷ்ணன், செயல் இயக்குநர் டி. கணேசன், துணைச் செயலர் அம்பிகாபதி, மனிதவள இயக்குநர் மீனாவயிரவன், மனிதவள-திட்டமிடல் யோகநாதன், பொருளாளர் டாக்டர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.