புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு நாள் பயிற்சி

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அன்னவாசல் வட்டார வள மையம் புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி எண்ணும் எழுத்தும் இரண்டு நாள் பயிற்சி ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி அன்னவாசல் மற்றும் ஆர்சி நடுநிலைப்பள்ளி இலுப்பூரில் சிறப்பாக நடைபெற்றது.

பயிற்சியினை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு செந்தில்குமார் வரவேற்று தொடங்கி வைத்தார்கள். இரு கண் என போற்றப்படும் எண்ணையும் எழுத்தையும் மாணவர்கள் மனதிலே பதிய வைக்கும் முறைகள் குறித்தும் உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் கலந்த உயிரோட்டமான தமிழ் எழுத்துக்கள், கல் தோன்றி மண் தோன்றா காலத்தே  முன் தோன்றிய மூத்த மொழியாகிய தமிழின் பெருமைகளும் சிறப்புகளும், எழுத்துக்களில் பூஜ்ஜியம் என்னும் ஆச்சரியம் பற்றி ஆசிரியர் பயிற்றுநர்கள் உமா மகேஸ்வரி மற்றும் ஜோசப் ரோசாரியோ கில்பர்ட் சிறப்பாக பயிற்சி அளித்தனர்.

நிகழ்வில் கலந்து கொண்டு வட்டார கல்வி அலுவலர் அலெக்சாண்டர் பேசுகையில் மாணவர்களை செய்முறைகளின் அடிப்படையில் விளையாட்டு உணர்வோடு எண்ணையும் எழுத்தையும் கற்றுக் கொடுக்கும் பொழுது மாணவர்கள் எளிதாக புரிந்து கொண்டு தங்கள் திறனை வளர்த்துக் கொள்வார்கள் என்றும் அவரவர்கள் படிக்கும் வகுப்பிற்கு ஏற்ப அவர்களின் கல்வித் திறன் மேம்படும் என்றும் மாணவர்கள் ஒழுக்க நெறிகளையும் கற்றுக்கொள்ள ஏதுவாகும் என்றும் எடுத்துக் கூறினார். பயிற்சியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 190பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். ஆசிரியர் பயிற்றுநர் மீனாட்சி நன்றி கூறினார்.