பிளஸ்டூ பயிலும் மாணவர்கள் ஜே.இ.இ நுழைவுத் தேர்வு எழுதாமல்  ஐ.ஐ.டி மெட்ராஸில் பட்டப்படிப்பு  பயில்வதற்கான சேர்க்கையினை பெறலாம்

புதுக்கோட்டை  முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்டூ பயிலும் 200 மாணவர்களுக்கு  அனைவருக்கும் ..டி( இந்திய தொழில் நுட்பக்கழகம்) மெட்ராஸ் மற்றும் பள்ளிக்கல்விக்கல்வித்துறையும் இணைந்து   ..டி யில் உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டல் நிகழ்ச்சி முதன்மைக்கல்வி அலுவலர் ( பொ) கூ.சண்முகம் அறிவுரையின்படி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு  புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் .ரமேஷ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அனைவருக்கும் ..டி மெட்ராஸ் திட்ட  தலைவரும் மற்றும் ..டி  மெட்ராஸ் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு சமூக முன்னெடுப்புகள் தலைவருமான  என்.ஹரிகிருஷ்ணன் கலந்துகொண்டு பிளஸ்டூ பயிலும் மாணவர்களுக்கு ..டியில் பயில்வதற்கான வாய்ப்புகள் குறித்து பேசும்போது கூறியதாவது, இந்திய அளவில் உயர்கல்வி நிறுவனங்களான 23 இந்திய தொழில் நுட்ப கழகங்கள் ( ..டி) உள்ளனஇவற்றில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.. மெயின், ஜே.. அட்வான்ஸ்  ஆகிய நுழைவுத் தேர்வுகளை எழுதி அதிலிருந்து 16 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு  தர வரிசை அடிப்படையில் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இதில் மெட்ராஸ் ..டி இந்தியாவிலேயே முதன்மையானதாகும். முதல் 1000 தர வரிசைக்குள் உள்ளவர்கள் மெட்ராஸ் ..டியில் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.இம்முறையில் சேர்க்கை பெறுவது மிகவும் சிரமமானதாகும். இத்தகைய ஜே.. நுழைவுத்தேர்வு இல்லாமல் அரசுப்பள்ளிகளில் பிளஸ்டூ பயிலும் மாணவர்களும் பிளஸ்டூ பயிலும்போதே  தகுதித்தேர்வின் வாயிலாக ..டியில் பட்டப்படிப்பு பயில்வதற்கான சேர்க்கையினை பெற தமிழக முதலமைச்சர்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது நாம் அனைவரும் பெருமைப்பட  வைத்துள்ளதாகும்.

இம்முறையில் பிளஸ்டூ பயிலும் மாணவர்களுக்கு  ஒரு குறிப்பிட்ட பாடப்பகுதியினை  4 பாடங்களில் வழங்கி சுயக்கற்றல் வாயிலாக 4 வாரம் இணைய தள வாயிலான பயிற்சிக்கு பின் தகுதித்தேர்வினை எழுத வைத்து  அதிலிருந்து தகுதியுள்ள தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு ..டியில் இளங்கலை அறிவியல் 4 வருட பட்டப்படிப்புக கான சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இளங்கலை தரவு அறிவியல், இளங்கலை மின்னணுவியல் அமைப்பு ஆகிய 2 வகையான 4 வருட படிப்பு உள்ளதுபிளஸ்டூவில் எந்தப்பிரிவு படித்தவரும் இளங்கலை தரவு அறிவியல் 4 வருட பட்டப்படிப்பினை படிக்கலாம். பிளஸ்டூவில் கணிதம்,இயற்பியல் பாடப்பிரிவு பயின்றவர்கள் மட்டுமே இளங்கலை மின்னணுவியல் அமைப்பு பட்டப்படிப்பினை படிக்கலாம். இந்த ஆண்டுக்கு செப்டம்பர் மாதம் தகுதித்தேர்விற்கான அறிவிப்பு வரும்.அக்டோபர் மாதம் தகுதித்தேர்வானது திருச்சி அல்லது தஞ்சாவூரில் நடைபெறும்.

இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்குள் இருந்தால்75 சதவீத கட்டண சலுகையிலும், பெற்றோரது ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்குள் இருந்தால் 50 சதவீத கட்டண சலுகையிலும், ஆதிதிராவிட, பழங்குடியினமாணவர்களாக இருந்தால்  ..டி, தமிழ்நாடு அரசின் தாட்கோ, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு ஆகியோர் இணைந்து வழங்கும் 100 சதவீத கட்டண சலுகையிலும்  பிளஸ்டூவிற்கு பின்  வேறொரு கல்லூரிப்படிப்புடன் ..டி 4 வருட பட்டப்படிப்பினை பயிலலாம். இப்படிப்பின் வாயிலாக  வாழ்க்கையில் நீங்கள் உயர்ந்த இடத்தை அடையலாம்.

இம்முறையில் யார் வேண்டுமனாலும் பயிலலாம். இதில் அரசின் பல உயர் அலுவலர்கள் சேர்ந்து படிப்பது இப்படிப்பின் சிறப்பம்சமாகும். ..டியில்4 வருட பட்டப்படிப்பிற் கு பின் ஜி..டி.டி ( GATT)  தேர்வு வாயிலாக ..டியில் நேரடியாக சேர்ந்து உயர்கல்வி பயிலலாம். உண்மையை ஒத்துக்கொள்ளும்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். உலகில் வெற்றி பெறக்கூடிய  எந்த கனவும் தோற்றதில்லை.உதாரணமாக இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் .பி.ஜே. அப்துல்கலாம் வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்தபோதும் தான் கண்ட கனவினை நனவாக்கினார்.அது போல நீங்களும் கனவு கண்டு ..டி தகுதித்தேர்விற்கு நன்கு தயார் செய்து  தகுதித் தேர்வின் வாயிலாக ..டியின் இளங்கலை தரவு அறிவியல், இளங்கலை மின்னணுவியல் அமைப்பு ஆகிய 4 வருட பட்டப்படிப்பினை படித்து  வாழ்வில் உயர வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.

மேலும் நிகழ்ச்சியின் தாக்கம் குறித்து மாணவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவித்திட்ட அலுவலர் சுதந்திரன், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முருகையன், ராஜூ, மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெ.சி.சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள் கி.வேலுச்சாமி, குரு.மாரிமுத்து, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.