புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் சாலை விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் பாட்ஷா புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யாவுக்கு அளித்திருக்கும் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :- புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே ஜூன் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை நடந்த விபத்து மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திருக்கின்றது. குறிப்பாக பேருந்துகள் அதிவேகமாக செல்வதால் தான் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன தனியார் பேருந்து அரசு பேருந்தும் ஒரே நேரத்தில் இயக்கப்படுவதால் இவர்களுக்குள் பயணிகளை ஏற்றி செல்வதில் போட்டி போட்டுக் கொண்டு அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் ஏற்படுகிறது.
அதேபோல் விபத்து நடந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் புதிதாக பேருந்து நிறுத்தம் ஒன்று கட்டப்பட்டுள்ளது அப்பகுதியில் வேகத்தடை அமைத்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இனிவரும் காலங்களில் விபத்துகளும் தவிர்க்கப்படும் பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.