மாணவியருக்கான சுகாதார வளாகம் திட்ட துவக்க விழா

ரோட்டரி அறம் ஆண்டின் ஆளுநர் ஆனந்த ஜோதி அவர்களின் சிறப்பு திட்டமான அரசு பள்ளி மாணவியருக்கான சுகாதார வளாகம் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா 21-6- 2024 அன்று மதியநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

ரோட்டரி அறக்கட்டளை, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, ஹோட்டல் ஸ்ரீபாலாஜி பவன் மற்றும் புதுக்கோட்டை கிங்டவுன் ரோட்டரி சங்கத்தின் பங்களிப்பில் நடைபெற உள்ள திட்ட நிகழ்வில் ரோட்டரி முன்னாள் ஆளுநர் ஜி.கோபால், துணை ஆளுநர் சு.கதிரேசன், திட்ட புரவலர் கா.கான் அப்துல் கஃபார் கான், அறம் ஆண்டு தலைவர் ஆனந்த், செயலாளர் கஸ்தூரி ரங்கன், வாகை ஆண்டு தலைவர் ஆனந்த்,   பள்ளித் தலைமை ஆசிரியர் தர்மசேகர், அன்னவாசல் ஒன்றிய பெருந்தலைவர் வி.ராமசாமி, கல்விப் புரவலர் அ.முகமது ரிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டு கட்டுமான பணிகளின் துவக்க விழாவை சிறப்பித்தனர்.

இந்தத் திட்டம் குறித்து ரோட்டேரியன் கான் அப்துல் கஃபார் கான் தெரிவித்ததாவது, தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் இந்த திட்டம் இரண்டாவது கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதியநல்லூர் பள்ளியோடு சேர்த்து மொத்தம் 30 பள்ளிகளுக்கு சுகாதார வளாகம் ரோட்டரி மாவட்டம் 3000 மூலம் கட்டப்பட இருக்கின்றன என்றார்.