புதுக்கோட்டை, மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி முதல்வர் பெ.சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் ஆசிரியர் இன்பராஜ் வரவேற்றுப் பேசினார்.
தொடர்ந்து போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்து,சிவகங்கை -புதுக்கோட்டை – போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவைச் சேர்ந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் அன்பு குமரன் மற்றும் தலைமைக் காவலர் தேவராஜன் ஆகியோர் மாணவர்களிடையே போதைப்பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறினர்.
போதைப் பழக்கம் ஒருவருடைய வாழ்வை சீரழிக்கக் கூடியது. அது உடல் நலத்தையும் கெடுக்கும் சமூகத்தில் உள்ள நற்பெயரையும் கொல்லும். தனிமனிதனை மட்டுமல்ல ஒரு குடும்பத்தையே உரு குழைத்து விடும். அதற்கு கல்லக்குறிச்சியே சாட்சி. சிறிய தொடக்கமே பெரிய அழிவிற்கு கொண்டு போய்விடும். எனவே மாணவர்கள் எந்த விதமான போதை பழக்கங்களுக்கும் அடிமையாகாமல் படிப்பில் முழு கவனம் செலுத்தி பெற்றோர்களுக்கு நல்ல மகனாகவும் இந்த சமுதாயத்திற்கு நல்ல குடிமகனாகவும் இருந்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்.மேலும் இது குறித்த விழிப்புணர்வினை மாணவர்கள் தங்கள் குடும்ப அங்கத்தினர்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆசிரியர்கள் கந்தசாமி , சரவணன் உடற்கல்வி இயக்குநர் முத்துச் செல்வம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இறுதியாக ஆசிரியர் பிரபு அனைவருக்கும் நன்றி கூறினார்.