முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். “யுஜிசி நெட் தேர்வைத் தொடர்ந்து முதுநிலை நீட் தேர்வையும் மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது; முதுநிலை நீட் தேர்வு ரத்தானதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.
தொழில்முறை படிப்புகளில் நேர்மையான தேர்வு முறையை கொண்டுவர அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
நெட் தேர்வை தொடர்ந்து முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டதால், நமது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்புகளில் நேர்மையான தேர்வு முறையை கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
தொழில்முறை படிப்புகளுக்கான நியாயமான மற்றும் சமமான தேர்வு செயல்முறையை உருவாக்க வேண்டும். பள்ளிக் கல்வியின் முதன்மையை உறுதி செய்யவும், அதை தொழில் வாழ்க்கைக்கு அடிப்படையாகவும் மாற்ற வேண்டும். தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வுமுறையைத் தீர்மானிக்க மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். மிக முக்கியமாக, மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மனதில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.