கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் : சிப்ஸ் கடை உரிமையாளரை கைது செய்தது சிபிசிஐடி

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயத்தை குடித்து 57 பேர் உயிரிழந்த வழக்கில் சிப்ஸ் கடை உரிமையாளரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்தது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயத்தை குடித்து 57 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் இது பெரிய பின்னலாக செயல்பட்டு வந்தது தெரிந்ததை அடுத்து பத்துக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் 11 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பண்ருட்டியில் சிப்ஸ் கடை நடத்தி வரும் சக்திவேல் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். சக்திவேல், தன்னுடைய ஜிஎஸ்டி பில்லை கள்ளச் சாராயம் விற்ற மாதேஷ் பயன்படுத்த அனுமதி அளித்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். சக்திவேலின் ஜிஎஸ்டி பில்லை பயன்படுத்தி தான் மாதேஷ் எண்ணெய் என்ற பெயரில் ‘பொருள்’ ஒன்றை வாங்கி, அதை தண்ணீரில் கலந்து விற்றுள்ளார். அதைப் பருகித்தான் பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.