தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 50-வது பிறந்தநாள் விழா : பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகாவில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் 50-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் ஆவுடையார்கோவில் ஒன்றிய தலைவர் எம்.வீரசேகர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் என்.ஆனந்தின் உத்தரவுக்கிணங்க  புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஜே.பர்வேஸ் வழிகாட்டுதலின்படி, ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் ஆவுடையார்கோவில், பழந்தாமரை, புண்ணியவயல் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இனிப்புகள், பென்சில், பேனா, நோட்டு, நல்ல சிந்தனையை தூண்டும் புத்தகங்கள் ஆகியவை மாணவ மாணவிகளுக்கு வழங்கி விஜயின் ஐம்பதாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஆவுடையார் கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு ஆங்காங்கே மரக்கன்றுகள்  நடப்பட்டு விஜயின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது..