திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு தேசிய மாணவர் படை, யூத் ரெட் கிராஸ், யோகா மையம், உடற்கல்வித் துறை ஆகியவை இணைந்து நடத்திய யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் முனைவர் கா.வாசுதேவன் தலைமை தாங்கினார், கே.கே.நகர் மனவளக் கலை மன்ற பேராசிரியர் சுப்பிரமணியன் மற்றும் பெரியார் கல்லூரி மேனாள் தமிழ் இணைப் பேராசிரியர் முனைவர் கீ.மைதிலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு யோகா செய்வதின் சிறப்புகளையும், அதன் பயன்களையும் எடுத்துரைத்தனர். தேசிய மாணவர் படை பொறுப்பாளர் கேப்டன் முனைவர் ஆரோக்கிய சகாயராஜ், யோகா மையப் பொறுப்பாளர்கள் முனைவர் இரா.பார்வதி, பேரா.என்.சுதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கே.கே. நகர் மன வளக்கலை மன்ற பொறுப்பாளர்கள் மாணவ மாணவிகளுக்கு யோகா பயிற்சியளித்தனர். முன்னதாக யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலரும் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முனைவர் இரா.குணசேகரான் நிகழ்ச்சியைத் தொகுத்து வரவேற்புரை நிகழ்த்தினார். விளையாட்டுத் துறை இயக்குநர் இரா.முருகானந்தம் நன்றியுரை ஆற்றினார்.