புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி பெரிய மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபை சார்பில் 10-ஆம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ மாணவிகளுக்கான 12ஆம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
அரசு பொது தேர்வு ஏழுதிய 10 -ஆம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிபாடு ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜையில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் தேர்வில் சிறப்பாக மதிப்பெண் பெறுகின்றவர்களுக்கு அனுமன் திருச்சபையினர் சார்பில் தொடர்ந்து கல்வி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் நடைபெற்ற விருது வழங்கும் விழாவுக்கு வட்டார கல்வி அலுவலர் பிரியா தலைமை வகித்தார். அழகப்பா பல்கலை கழக பேராசிரியர் மாலதி அனைவரையும் வரவேற்றார். ஆலய குருக்கள் கே.மணி சிவாச்சாரியர், கவிதா மெட்டல் உரிமையாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். மாமன்னர் கல்லூரியின் முதல்வர் பி.புவனேஸ்வரி 10-ஆம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற 72 மாணவ, மாணவியர்களுக்கு கல்வி விருது வழங்கி வாழ்த்தி பேசினார்.
நிகழ்வில் குழந்தைகள் நல மருத்துவர் எஸ்.ராம்தாஸ், ஜெ.ஜெ.கல்லூரி பேராசிரியர் அனிதா, மாங்குடி அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் கண்ணன், பரம்பூர் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் குழந்தை வேலு, அரசு பள்ளி ஆசிரியர்கள் சுரேஷ், காசிவிசுவநாதன், மேலப்பட்டி அறிவியல் ஆசிரியர் மகேஷ்வரன், திருக்கோகர்ணம் அரசு பள்ளிபெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சினிவாசன் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள். மருதாந்தலை ஆய்வக ஆசிரியை ஜான்சி ராணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, ஆலய குருக்கள் கே.மணி சிவாச்சாரியர், அனுமன் திருச்சபை நிர்வாகிகள் வீரலெட்சுமி, கவிதா மெட்டல் உரிமையாளர் முருகேசன், உள்ளிட்டோர் சிறப்பாக செய்தனர். ஆன்மிகநெறியாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.