கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 57 பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கு : சிறைத்துறை தலைமை காவலர் உட்பட ஆறு பேரை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உட்கோட்டம் திருநாவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொப்பையான்குளம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி மனைவி ராஜாமணி என்பவர் கடந்த 10-ம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் தனியாக தூங்கி கொண்டு இருந்தபோது வீட்டின் நிலைகதவு தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு, பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 57 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்களால் திருடி சென்றுவிட்டதாகவும் மேற்படி தங்க நகைகளை கண்டிபிடித்து தருமாறு ராஜாமணி கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இவ்வழக்கை விரைந்து கண்டுபிடிக்க விழுப்புரம் காவல் சரக காவல் துணைத்தலைவர் திஷா மிட்டல் அறிவுறுத்தலின் படி, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங்மீனா உத்தரவின் படியும், உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில், திருநாவலூர் காவல் ஆய்வாளர் குமார், உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் வீரமணி, திருநாவலூர் காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம், திருப்பாலபந்தல் உதவி ஆய்வாளர் தனசேகர் மற்றும் தலைமை காவலர்கள் மணிகண்டபெருமாள், அசோக்குமார், காவலர்கள் விக்ரம்வாசு,தண்டபாணி ஆகியோர்கொண்ட இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்ததில் சம்பவயிடத்தில் விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் ராஜவேல் மற்றும் அவரது குழு மற்றும் மோப்ப நாய் பிரிவு ஆகியவை வரவழக்கப்பட்டு ஆய்வு செய்ததில் சம்பவயிடத்தில் கிடைத்த விரல் ரேகையானது திருநாவலூர் காவல் நிலைய சரித்திர பதிவேடட்டில் உள்ளவரும் தொடர் திருட்டு வழக்குகளில் ஈடுபடும் நபர்களின் கைரேகை ஒத்துப்போவதால் தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது இவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மேற்படி கொள்ளையர்கள் ஏரியில் சுற்றித் திரிவது தெரியவந்தது இதனை அடுத்து மேற்படி இடத்திற்கு சென்றபோது ஏறியில் ஆறு நபர்கள் கும்பலாக அமர்ந்து கொண்டிருந்தனர். போலிசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தவர்களை போலீஸ் மடக்கி பிடிக்க அதில் ஒருவர் மட்டும் தப்பி செல்ல மற்ற ஐந்து நபர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக அவர்களது பெயர் விலாசங்களை மாற்றி மாற்றி கூறினர்.

சந்தேகத்தின் பெயரில் விசாரணை செய்ததில் திருடு போன 50 சவரன் நகைகளும், மீதி ஏழு சவரன் நகைகளை விற்ற 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணமும், சம்பவத்திற்கு பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றி, மேலும் விசாரணையில் கடலூர் மத்திய சிறையில் பணியாற்றும் தொப்பையாம் குளம் கிராமத்தை சேர்ந்த துரைபாண்டியன் மகன் ஞானமணி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்தை சேர்ந்த கோபால் மகன் மாரிமுத்து வயது 31, விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் வட்டம், சரவணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ரகு மகன் உதயா வயது 24, கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பெரியகாட்டுபாளையம் கீழிருப்பு பகுதியை சேர்ந்த செந்தில் மகன் சுதாகர் வயது 32, கலியபெருமாள் மகன் சுபாஷ் சந்திரபோஸ் வயது 25, கடலூர் மாவட்டம் நெய்வேலி, இந்திரா நகர் பகுதியை சேர்ந்த தாஜுதீன் மகன் கபார்தீன் வயது 23, உள்பட ஆறு நபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.