குளமங்கலம் ஸ்ரீ பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா,  கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில் 33 அடி உயரத்தில் வானில் தாவிச்செல்லும் வடிவில் அமைக்கப்பட்டுள்ள குதிரை சிலை ஆசியாவில் உயரமான சிலை என்ற பெயர் பெற்றதால் இதனை பெரிய கோயில் என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.

oplus_0

இந்த கோயிலில் மாசிமகத் திருவிழா 2 நாட்கள் பிரமாண்டமாய் நடைபெறும். இந்த நாட்களில் பிரமாண்ட குதிரை சிலைக்கு அதே உயரத்தில் காகிதப்பூ மாலைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவார்கள். சுமார் 3 ஆயிரம் மாலைகள் வரை குதிரை சிலைக்கு அணிவிக்கப்படும் அழகே தனி. இந்த  கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று   இன்று  குடமுழுக்கு நடைபெற்றது. மூன்று நாட்களாக யாகசாக பூஜைகள் நடைபெற்று வந்தது. யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் யானை, குதிரைகள்  செண்டை மேளம் முழங்க எடுத்து செல்லப்பட்டது. வானில் கருட பகவான் வட்டமிட புனித நீரை சிவாச்சாரியார்கள் கோபுரத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடந்தினர். விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டார். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்திருந்தனர். பின்னர் அமைச்சர்  மெய்யநாதன் சார்பில்  சுமார் 2 லட்சம் மரக்கன்றுகள்  பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.