புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில் உள்ளிட்ட விளையாட்டு துறை அலுவலர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
புதுக்கோட்டை பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் கீழ ராஜவீதி பால் பண்ணை ஜல்லிக்கட்டு காளை வழியாக புதுக்கோட்டை விஜய் பேலஸில் இப்போட்டியானது நிறைவடைந்தது போட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஓடினர் ஆண்கள் பிரிவில் 5 பேருக்கும் பெண்கள் பிரிவில் 5 பேருக்கும் என மொத்தம் 10 பேருக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது ஆங்காங்கே காவல்துறையினர் மற்றும் உடற்பயிற்சியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போட்டியானது பல்லின் முக்கியத்துவம் குறித்தும் பல் முகத்தில் முக்கிய அங்கமாக இருப்பதால் பல்லை எப்படி பாதுகாக்க வேண்டும் பராமரிக்க வேண்டும் பல் இல்லை என்றால் சொல் இல்லை என்று சொல்வார்கள் ஆகையால் பல்லை பராமரிக்க வேண்டும் என்பதற்காகவும் அது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக யாழ் பல் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.