கீரனூர் அரசு ஆண்கள் பள்ளியில் சுற்றுச்சூழல் தினவிழா

ஜூன் 12 உலக சுற்றுச்சூழல் தின விழா  கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

விழாவிற்கு தலைமை ஆசிரியர் பரிமளம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக  கலந்துகொண்டமாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில் பூமி உயிர்க் கோளமாக இருப்பதின் அவசியத்தையும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழி பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தியும்  மாணவர்கள் இடையே விழிப்புணர்வு உரையாற்றினார். 

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர்  வெங்கடசுப்பிரமணியன்  நெகிழி பயன்பாட்டை குறைக்கவும் அதனால் இன்று காணப்படும் உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சனைகளை பற்றியும் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழியையும்  நெகிழி பயன்பாட்டை குறித்து மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்தவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக ஆசிரியர் தங்கம் வரவேற்புரை  ஆற்றினார். பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாசிரியர் சோலைமுத்து நன்றி கூறினார்.

கே.ஆர்.ரமேஷ் தொகுத்து வழங்கினார். ஆசிரியர்கள்   சின்னத்துரை கணேசன்  கபிரியேல்  ராமலிங்கம், பாலகுமார்,  செல்லபாண்டியன், தீபக், காணிக்கைராஜ் மற்றும் ஆசிரியைகள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.