மங்களத்துப்பட்டி அய்யனார் உருமநாதர் கோயில் இரட்டைத்தேரோட்டம் பக்தர்கள் சாமி தரிசனம்

பெருங்களூர் அருகே மங்களத்துப்பட்டி ஶ்ரீஅய்யனார் ஶ்ரீஉருமநாதர் கோயில் இரட்டைத்தேரோட்டம். திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள வீரசிங்க நாட்டைச்சேர்ந்த மங்களத்துப்பட்டியில் அய்யனார் உருமநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் வைகாசித் திருவிழாவானது கடந்த மே மாதம் 27 – ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 

பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் காவடி எடுத்தும் அலகு குத்தியும் தாறை தப்பட்டை முழங்க தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற இரட்டை தேரோட்டத்தில் டிராக்டரை கொண்டு இழுத்துவரப்பட்ட இழுவைத்தேரில் நான்குரத வீதிகளின் வழியாக அய்யனார் உருமநாதர் அலங்கரிக்கப்பட்ட இரட்டைத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தனர். பின்னர் அய்யனாருக்கு கிடாய் வெட்டு பூஜை நடைபெற்றது. திரளான பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். திரளான பக்தர்கள் தேரின் முன் சிதர் தேங்காய் உடைத்தும் அய்யனார் உருமநாதரை வழிபட்டனர்.

இந்த தேர்த்திருவிழாவில் மனவாத்திப்பட்டி, நெம்மேலிப்பட்டி, அரவம்பட்டி,  லட்சுமிபுரம், சீத்தப்பட்டி, பூங்குடிப்பட்டி, குட்டகுளவாய்ப்பட்டி  உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதியம் அன்னதானம் நடைபெற்றது.